‘முனி’, ‘காஞ்சனா’ (முனி-2) ஆகிய படங்களின்
வெற்றிகளைத் தொடர்ந்து ராகவா லாரன்ஸ் ‘கங்கா’ என்ற பெயரில் முனி-3 ஆம் பாகத்தை இயக்கி
வருகிறார். இந்த படத்தில் இரண்டு கதாநாயகிகள் நடிக்கின்றனர். அதில் ஒருவர் டாப்சி.
இன்னொரு நடிகையாக அஞ்சலி ஒப்பந்தமாகியிருந்தார்.
இந்நிலையில், சித்தியுடனான
பிரச்சினையில் சிக்கித் தவிக்கும் அஞ்சலி இப்போதைக்கு தமிழ் படத்தில் நடிப்பதில்லை
என முடிவெடுத்து ஐதராபாத்திலேயே முகாமிட்டுள்ளார். இந்நிலையில், அஞ்சலி கதாபாத்திரத்தில்
நடிப்பதற்காக நித்யா மேனனை ஒப்பந்தம் செய்துள்ளாராம் ராகவா லாரன்ஸ்.
தமிழ், தெலுங்கு,
மலையாளம் ஆகிய மொழிகளில் இந்த படம் வெளியாவதால், அந்த மொழிகளுக்கு நித்யா மேனன் நன்கு
அறிமுகமான முகம் என்பதால் இவரை தேர்வு செய்துள்ளாராம். அதற்காக, நித்யா மேனனுக்கு பெரிய
தொகை சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளதாம். விரைவில் இவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட
உள்ளது.
நித்யா மேனன் தமிழில்
‘180’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர். இவர் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜே.கே.எனும்
நண்பனின் வாழ்க்கை’,
‘மாலினி 22 பாளையங்கோட்டை’ ஆகிய படங்கள் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக
உள்ளது.
Post a Comment Blogger Facebook